டயட் என்ற பெயரில் வெறும் முட்டையும் மீனுமாக முழங்கிய ரோபோ ஷங்கரின் மகள்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

pandima-1

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி தற்போது பிரபல காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவ்வாறு பிரபலமான நமது நடிகரின் வாரிசுகளும்  தற்போது சினிமாவில் காமெடி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்தவகையில் ரோபாசங்கரின் மகளான இந்திராவும் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டு கொடுத்த திரைப்படம்தான் பிகில் இத்திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து இருப்பார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற முக்கியக் காரணம் என்னவென்றால் பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் காரணம்.

மேலும் இந்த திரைப்படத்தில் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக பல்வேறு நடிகைகள் நடித்துள்ளார்கள் அதில் பாண்டியம்மாள்  என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் ரோபோ சங்கரின் மகள். இவர் அந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது மிகவும் உடல் எடை அதிகமாக இருந்து காணப்பட்டார்.

ஆனால் தற்சமயம் கடுமையான உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு மிக ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார்.  அந்த வகையில் தன்னுடைய உடல் எடையை குறைக்க 100 நாட்கள் சேலஞ்ச் வைத்துதான் குறைத்தேன் என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் டயட் எடுத்துக் கொண்ட உணவு என்னவென்றால் காலை எழுந்தவுடன் 5 பாதாம் மற்றும் கிரீன் டீ குடித்துவிட்டு உடற் பயிற்சி செய்வாராம் பின்னார் மஞ்சள் கரு நீக்கிய முட்டை மற்றும் ஓட்ஸ் சாப்பிடுவாராம் அதன்பின்  மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை ஆகியவைதான் இவருடைய காலை உணவு.

indhuraja-1
indhuraja-1

பின்னர் மதியம் ஏதேனும் ஜூஸ் குடிக்கலாம் அல்லது சிக்கன் காய்கறி மீன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வாராம். அதேபோல இரவு 8 மணிக்கு மேல் பசித்தால் சுடுதண்ணி மட்டும் குடித்துவிட்டு படுத்து விடுவாராம் என்ற ரோபோ சங்கரின் மகள் கூறியுள்ளார்.

indhuraja-2