விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களை தாண்டி தற்பொழுது 6வது சீசனும் கிட்டத்தட்ட 60 நாளை எட்டி உள்ளது இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்ட பலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தொடர்ந்து வாரம் தோறும் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று வரும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் அந்த வகையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் தான் ராபர்ட் மாஸ்டர். இவர் சமீபத்தில் கூறியுள்ள தகவல் சோசியல் மீடியாவில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதாவது ராபர்ட் பிக்பாஸ் வீட்டில் எதற்கு சென்றோம் என்பதை மறந்து ரட்சிதாவின் பின்னாடியே கிரஷ் என்ற பெயரில் சுத்தி வந்தார் எனவே இவருக்கு குறைவான வாக்குகள் கிடைத்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் இவரை தொடர்ந்து குயின்சி ஞாயிற்றுக்கிழமை அன்று குறைவான வாக்குகளை பெற்ற இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இப்படிப்பட்ட நிலையில் கமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அதிரவைக்கும் அளவிற்கு அடுத்த வாரம் இரண்டு எவிக்சன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அனைத்து போட்டியாளர்களும் பயத்திலிருந்து வரும் நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் சமீப காலங்களாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
மேலும் முக்கியமாக ரட்சிதாவை பற்றி பேசி வந்த இவர் அவர் என்னுடைய காதலி கிடையாது கிரஷ் மட்டும் தான் என கூறியிருந்தார். மேலும் ஒரு பேட்டியில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு பிக்பாஸ் வீட்டில் தனது மகளாக நினைத்த குயின்சியின் பெயரை தான் வைக்கப் போவதாகவும் குயின்சியை தனது நிஜ மகளாக தான் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.