எனக்கு இவரின் மீது கிரஷ் இருப்பதாக கூறிய ராபர்ட் மாஸ்டர்.! கமலஹாசன் வைத்த ஆப்பு..

bigg-boss-06
bigg-boss-06

விஜய் டிவியில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் கடந்த சீசர்களை விட இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களை களம் இறக்கி உள்ளார்கள். அந்த வகையில் சோசியல் மீடியாவின் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட 20 போட்டியாளர்களை களமிறக்கி உள்ளார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் கலந்து கொண்டுள்ளார் இவர் நடிகை வனிதாவின் முன்னாள் காதலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் பல போட்டியாளர்கள் ஜிபி முத்துவை டார்கெட் செய்து வருகிறார்கள் இதனால் ஜிபி முத்து தான் ஜெயிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமியை ராபர்ட் விடாமல் துரத்தி வருகிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி. இவருடைய அழகினாலும் சிறந்த நடிப்பினாலும் இவருக்கு என தனி, ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இவர் சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் இதுவரையிலும் சட்ட ரீதியாக விவாகரத்து ஆகவில்லை மேலும் சமீபத்தில் தினேஷ் ரக்ஷிதாவிற்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறி ட்விட்டரை வெளியிட்டு இருந்தார். எனவே பிக்பாஸ் முடிந்தவுடன் ரக்ஷிதா தினேஷ் இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரக்ஷிதாவிடம் ராபர்ட் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார் அதுவும் தனக்கு திருமணமான விஷயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக புடவையில் நெற்றியில் குங்குமரத்துடன் வலம் வந்தார் ரக்ஷிதா இந்த நேரத்தில் ராபர்ட் மற்றும் போட்டியாளர்களிடம் எனக்கு இரட்சிதாவின் மீது கிரஷ் இருப்பதாக கூறியுள்ளார் இது ரக்ஷிதாவிற்கு பிடிக்கவில்லை என்றால் அதனை வெளிப்படையாக கூறாமல் இருந்து வருகிறார். எனவே இதன் காரணமாக வரும் சனிக்கிழமை அன்று கமலஹாசன் ராபர்டை வச்சு செய்ய இருக்கிறார்.