டிஆர்பிஇல் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய புதிய நிகழ்ச்சி மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் இந்த ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி இந்த வருடம் ஆறாவது சீசனை ஒளிபரப்பி வருகிறார்கள் விஜய் தொலைக்காட்சி.
இந்த பிக் பாஸ் ஆறாவது சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார் அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, சாந்தி அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, என தொடர்ந்து பலர் வெளியேறி விட்டார்கள் இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார்.
ராபர்ட் மாஸ்டர் சீரியல் நடிகை ரச்சிதாவிடம் செய்த சில்மிஷன் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது அதுமட்டுமில்லாமல் ரட்சிதாவுடன் மிகவும் நெருக்கமாக இவர் விளையாடிய விளையாட்டுகள் அனைத்தும் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து விட்டார் அதனால் மிகக் குறைவான வாக்குகளை பெற்று இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இவரின் நிஜ காதலி கூட ராபர்ட் மாஸ்டர் மீது வெறுப்பை கட்டினார் என பலரும் கூறப்பட்ட நிலையில் தற்பொழுது நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறி உள்ளார். ஒரு சில ரசிகர்கள் நன்கு விளையாட கூடிய ஒரு நபர் இப்படி திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது சிலருக்கு வருத்தத்தையும் கொடுத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரத்திற்கு ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளது அப்படி இருக்கும் நிலையில் இதன் அடிப்படையில் தான் அவருக்கு சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.