ரச்சிதாவிடம் எல்லை மீறி நடந்து கொள்ளும் ராபர்ட் மாஸ்டர் – வீடியோவை பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்..!

robert-master-
robert-master-

மக்கள் பலருக்கும் ஒரு பெஸ்ட் என்டர்டைமென்ட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தந்த மொழிகளிலுமே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் ஃபேவரட் ஆக அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது இதனை தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒளிபரப்பாகி வரும் ஆறாவது சீசனில் ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டர், மைனா நந்தினி, அசிம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், அமுதவாணன், ஏ டி கே, ஜனனி, கதிர், விக்ரம் போன்ற பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் ரக்ஷிதா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தவர் அதை தொடர்ந்து இவர் பல சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு சிறப்பித்தவர். ஒரு கட்டத்தில் ரக்ஷிதா சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை பல ஆண்டுகளாக சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் சமீப காலமாக இருவருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க பிக் பாஸ் வீட்டில் ரக்ஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் கொஞ்சம் ஓவராக போய்க் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இவர் செய்யும் சில செயல்கள் காமெடியாக இருந்தாலும்..

தற்போது நடைபெற்றுள்ள ஒரு டாஸ்கிள் ரக்ஷிதாவிடம் இனி நான் உனக்கு அண்ணனா இருக்கேன், அப்ப நா அண்ணனுக்கு ஒரு முத்தம் கொடு என கேட்டுள்ளார் ஆனால் ரக்ஷிதா அதற்கு அண்ணனாக இருந்தாலும் முத்தம் கொடுக்க மாட்டேன் என பதிலடி கொடுத்துள்ளார் இருந்தாலும் ராபர்ட் மாஸ்டர் இப்படி பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வெளியீட்டு ராபர்ட் மாஸ்டரை திட்டி தீர்த்து வருகின்றனர்.