விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முந்தைய சீசன்களை விட இந்த ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இந்த போட்டியில் 21 போட்டியாளர்கள் பங்கு பெற்று வந்த நிலையில் சாந்தி இந்நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வெளியேறி இருக்கிறார். இதனை தொடர்ந்து ஜி.பி முத்து தானாகவே வெளியேறியுள்ளார்.
மேலும் இந்த வாரம் யார் வெளியே ஏறுவார் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சிகள் இந்த சீசனில் அமைதியான போட்டியாளர் என்றால் ராபர்ட் மாஸ்டர் தான் இவர் அதே நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் சரியாக பேசி வருவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
தற்பொழுது பொம்மை டாஸ் நடைபெற்று வரும் நிலையில் அனைவரும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் இந்த டாஸ்கின் மூலம் பலருடைய உண்மையான முகம் தெரிய வருகிறது. அந்த வகையில் முக்கியமாக விக்ரமன் அவர்களுடைய செயல்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து ரட்சிதா இந்நிகழ்ச்சியில் மிகவும் அமைதியாக ஒரு கம்போர்ட் சூனில் இருந்து வருகிறார் மேலும் பெரிதாக கோபப்படாமல் அமைதியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஆயிஷா பிளான் போட்டு ரக்ஷிதாவை இந்த போட்டியில் இருந்து வெளியேற்றி இருக்கிறார். ஆனால் நல்லவர் போல் ஆயிஷா சீன் போட்டு வரும் நிலையில் ரக்ஷிதா அதனை நம்பவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் இதனை பற்றி ரக்ஷிதா அனைவரிடமும் கூறிவரும் நிலையில் அப்பொழுது ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை ஏக்கத்துடன் பார்க்கும் வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது ரட்சிதா விக்ரமனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரை ராபர்ட் மாஸ்டர் பார்க்கும் பார்வை வீடியோ தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவுக்கு பின்னணியாக சிவகார்த்திகேயன் மற்றும் திவ்யா நடித்திருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இருந்த வசனங்களையும் அமைத்திருக்கிறார்கள்.
My wife ~
Robert master Rachitha-va paakura mathiri ennaikkavadhu paathu irukkiya. #BiggBossTamil #BiggBossTamil6Meanwhile master’s mindvoice ~ pic.twitter.com/zVPdWg7KVw
— Raja (@whyrajawhy) October 27, 2022