முதன்முறையாக திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ள ஆர்கே பாலாஜி.! போஸ்டர் மற்றும் டைட்டில் இதோ..

run-baby-run
run-baby-run

விஜேவாக பணியாற்றி வந்து பிறகு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து இதன் மூலம் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தும் இயக்கியும் வருபவர் தான் ஆர்ஜே பாலாஜி இவருடைய இயக்கத்தில் முதன்முறையாக எல்கேஜி திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

மேலும் இதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் உள்ளிட்ட காமெடி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் தற்பொழுது திர்லர் கதையும் சொல்ல திரைப்படம் ஒன்றில் முதன்முறையாக நடித்த வருகிறார். இவ்வாறு ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தினை ஜியான் கிருஷ்ணகுமார் இயக்க சான் சிஎஸ் இசையமைப்பில் உருவாகி வருகிறது மேலும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய மதன் படத்தொகுப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ரன் பேபி ரன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு இந்த போஸ்டரில் ஆர்.ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள் இருக்கும் நிலையில் தற்பொழுது சோசியல் மீடியாவில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

run baby run
run baby run

மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளில் வெளியான பிறகு டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி வழியாக வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போஸ்டரை ஆர்.ஜே பாலாஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வாறு இதற்கு முன்பு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய மூன்று திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இந்த படமும் நல்ல வரவேற்பினை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.