ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடர்ந்த ஆர்ஜே பாலாஜி பின் தனது திறமையை வளர்த்துக்கொண்டு சினிமா உலகில் களமிறங்கினார் முதலில் எதிர்நீச்சல், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்த அசத்தினார் அதன்பிறகு வாயை மூடி பேசவும், வட கரி, ஜில் ஜங் ஜக், காற்றுவெளியிடை, ஸ்பைடர் போன்ற படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி இருந்தாலும்..
விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த நானும் ரவுடிதான் படத்தில் இவர் புகழ் பெற்றார் அந்த அளவிற்கு இந்த படத்தில் அவரது காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது அதன்பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஏற்பட்ட நட்பை பயன்படுத்தி மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நயன்தாராவை அதில் நடிக்க வைத்தார்.
முதல் படத்திலேயே இவர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது சத்யராஜ் ஊர்வசி போன்ற டாப் நடிகர்களை வைத்து வீட்டில் விசேஷம் என்ற படத்தை இயக்கி அதில் நடித்தும் உள்ளார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சூர்யா பட நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை..
தொடர்ந்து இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் பேசிவந்த ஆர்ஜே பாலாஜி விஜய் சேதுபதியை திடீரென கலாய்த்து தள்ளினார்.
ரசிகர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் ஆர்ஜே பாலாஜி.
அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் கொஞ்சம் மெதுவாகப் பேசினாள் எல்லோருக்கும் புரியும் என்று கூற அதற்கு அவரோ சில சமயம் நான் பேசறது எனக்கு புரியாது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பேசுறது புரியாம இருக்கிற மாதிரி தான் நான் பேசுவதும் புரியாது என்று கூறினார்.