முதன் முதலாக ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஆர்ஜே பாலாஜி. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆரம்பத்தில் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார்.
அதன்பிறகு எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலமாக தான் கதாநாயகனாக தோற்றமளிக்க ஆரம்பித்தார் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றுவிட்டது.
அந்தவகையில் இத்திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படமும் அவருக்கு எதிர்பாராத வெற்றியை கொடுத்து அவருடைய பெயரையும் புகழையும் உயர்த்தி விட்டது. இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி பல்வேறு திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது ஆர்ஜே பாலாஜி தனக்கு நடந்த சில மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இவ்வாறு அவர் கூறியது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
அதாவது அவர் கூறியது என்னவென்றால் நீயும் நானும் என்ற ஒரு காதல் பாடல் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அப்பொழுது நயன்தாரா விஜய் சேதுபதியுடன் நானும் அருகில் இருப்பேன் மேலும் இத்திரைப்படத்தின் இயக்குனர் கூட என்னுடைய நெருங்கிய நண்பர் தான்.
அப்பொழுது இந்த பாடலுக்கு நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் அவர்கள் தான் நடனமாட வந்தார்கள் அப்போது இயக்குனர் உங்களுக்கு கார் ஓட்டும் காட்சி ஒன்று இருக்கிறது என்று கூறினார். அதற்கு உடனே நான் எனக்குதான் கார் ஓட்ட தெரியாது என்று கூறியிருந்தேன்.
அந்த காட்சியில் நான் கார் ஓட்டும் பொழுது கயிறு கட்டி இருப்பார்கள். அப்பொழுது மைக்கில் பிருந்தா மாஸ்டர் அவர்கள் கார் ஓட்ட தெரியாதவன் எல்லாம் நடிக்க வந்துட்டான் என கூறினார் அதற்கு நான் நடிக்க தெரியாதவனே நடிக்கும் போது கார் ஓட்ட தெரியாதவன் நடிக்க முடியாதா என்று சொல்லிவிட்டேன்.