தொடர் வெற்றியால் தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆர்.ஜே.பாலாஜி.!

rj-balaji
rj-balaji

தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமாகி பிறகு திரைப்படங்களை இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்து தற்பொழுது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ஆர்ஜே பாலாஜி. இவர் தொடர்ந்து ஆர்ஜே-வாக பணியாற்றி வந்த நிலையில் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்பொழுது ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவிற்கு சிறந்த காமெடி நடிகராக அறிமுகமான இவர் அதன் பிறகு எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பெற்று உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் ரன் பேபி ரன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பொதுவாக இவருடைய இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் காமெடி கலாட்டா நிறைந்த படமாக இருந்தாலும் சமூகத்திற்கு ஏதாவது ஒரு நல்ல கருத்தை கூறும் வகையில் அமைந்து வருகிறது.

இப்படி இவருடைய மார்க்கெட் தற்பொழுது சினிமாவில் உயர்ந்துள்ளதால் ஆர்.ஜே பாலாஜி தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை ஆனால் ஆர்.ஜே பாலாஜி தற்போது தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தற்பொழுது வந்துள்ள தகவலின் படி இவர் முதலில் 4 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த நிலையில் தற்போது தொடர்ந்து இவருடைய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு தனது சம்பளத்தை 7 கோடி ரூபாயாக உயர்த்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக சினிமாவை பொறுத்தவரை சம்பள உயர்வு என்பது சாதாரணமான ஒன்றுதான்.