ஆர் ஜே பாலாஜி மறைமுகமாக யாரை தாக்குகிறார் ஒருவேளை அஜித்தையா.? வைரலாகும் சர்ச்சை ட்விட்

rj balaji
rj balaji

ஆர்ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி வருகிறார் இவர் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்த நிலையில் தற்போது வீட்டில் விசேஷம் என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் படத்தை ஜூலை 17ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்த  பதாய் ஹோ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் அதனால் இந்த திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த திரைப்படம் நடுதர பெண்ணை நாயகன் காதலித்து வருகிறார் அதனை வீட்டில் சொல்ல முயற்சி செய்கிறார் ஆனால் அவருடைய அம்மா திடீரென கர்ப்பம் என்று தெரியவந்துள்ளது.

பிறகு அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் கிண்டலும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள் தன்னுடைய அம்மா கர்ப்பம் என தன்னுடைய காதலியிடம் எப்படி சொல்ல முடியும் அதை எப்படி கூறினார் அது தெரிந்தவுடன் காதலியின் ரியாக்ஷன் என்ன என குடும்பத்தில் நடக்கும் அனைத்தும் காமெடி கலந்த ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து ரசிகர் ஒருவர் கூறியதாவது இந்த சர்ச்சைக்குரிய கதை தமிழகத்தில் இந்த கதையை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை என கூறியுள்ளார் இதுகுறித்து ஆர் ஜே பாலாஜி பதிவு ஒன்றை செய்துள்ளார் அதில் அவர் கூறியதாவது ஆமாம் பேமிலி இல் ஒருத்தவங்க பிரக்நெட் ஆன மாதிரி படமெடுத்தால்  controversial story but hero, rowdy, don, கொலைகாரன், திருடன், ஸ்மக்கிளர் நடிச்சா ஃபேமிலி சப்ஜெக்ட் படம் என்று கூறியிருந்தார்.

ஆர் ஜே பாலாஜி பதிவு செய்த இந்த ட்வீட்டுக்குக் கீழே கமெண்ட் களில் அவர் மறைமுகமாக அஜீத்தை தாக்கி பேசியதாக கூறி வருகிறார்கள் ரசிகர்கள் ரவுடி கேரக்டரில் வேதாளம் படத்திலும் மற்றும் கொலைகாரன் கேரக்டர் பில்லா திருடன் கேரக்டரில் மங்காத்தா அஜித் நடித்து இருக்கிறார் எனவே அஜித்தை தான் ஆர்ஜே பாலாஜி மறைமுகமாக கூறி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அப்படிப் பார்க்கப் போனால் சிவாஜி முதல் பல நடிகர்கள் இதுபோல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது  ஆனால் அஜித்தை மட்டும் குறிவைத்து ஆர் ஜே பாலாஜி சொல்ல வாய்ப்பில்லை எனவும் சில ரசிகர்கள் இந்த கருத்தை மறுத்து வருகிறார்கள் இருந்தாலும் ஆர் ஜே பாலாஜி பதிவிட்டுள்ளது  சர்ச்சைக்குரிய கருத்தாக  பார்க்கப்படுகிறது.