நடிகர் சிம்பு இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அதேசமயம் இவர் நடித்த திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியை பெற்றுள்ளன சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது.
அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு ரொம்ப மெனக்கெட்டு நடித்து உள்ளார் என அவரே சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்தது ஆனால் சிம்பு முதலாவதாக பத்து தல படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது சிம்புவின் அப்பா டி ராஜேந்திரன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால் அவர் வெளிநாட்டுக்கு செல்கிறார்.
அவருடன் சிம்புவும் செல்ல இருக்கிறார் ஒரு மாதம் கழித்து தான் ஜூலை 18ம் தேதி வந்து பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் கொரோனா குமார் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதில் இருந்து அவர் விலக உள்ளதாக கூறப்படுகிறது படத்தின் கதை அவருக்குப் பிடிக்காமல் போனதால் அதிலிருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது
இதனையடுத்து தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக ஆர் ஜே பாலாஜி நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் இந்த படத்தின் தலைப்பை மாற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளாராம் அதனால் இப்போது அந்த படத்திற்கு சிங்கப்பூர் என டைட்டில் வைத்து படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.