சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த திரைப்படத்தை பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்காராவ் இயக்கியிருந்தார்.இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் அபர்ணா பாலமுரளி.
என்னதான் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் பிரபலமாகி இருந்தாலும் இதற்கு முன்பே இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நமது நடிகை அதன்பிறகு ஜிவி பிரகாஷ் உடன் சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
என்னதான் இந்த இரண்டு திரைப்படத்திலும் மூச்சை போட்டு தன்னுடைய முழு திறமையையும் காட்டி இருந்தாலும் இவர் பிரபலம் ஆனது எனவோ சூரரைப்போற்று திரைப்படம் மூலம் தான். இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அபர்ணா பாலமுரளி ரேஞ்சே மாறிவிட்டது.
அந்தவகையில் தற்போது முன்னணி நடிகர்களின் திரை பட வாய்ப்பை குறிவைத்து தாக்கி வரும் அபர்ணா பாலமுரளி இந்நிலையில் தற்போது ஆர்ஜே பாலாஜி உடன் பதாய் ஹோ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படமானது ஒரு ரீமேக் திரைப்படம் ஆகும்.
இத்திரைப்படம் முதன்முதலாக ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா சன் யா மல்கோத்ரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது மேலும் இத்திரைப்படமானது 28 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 270 கோடி வரை வசூல் செய்தது.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்ஜே பாலாஜியும் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் ஆர் ஜே பாலாஜி இந்த திரைப்படத்தில் அப்பாவாக நடிக்கபோவது சத்யராஜ் மற்றும் சத்யராஜுக்கு ஜோடியாக ஊர்வசி ஆகியோர்கள் நடிக்க உள்ளார்கள் இத்திரைப்படத்திற்கு வீட்ல விசேஷங்க என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வைக்கப்பட்ட தலைப்பிற்கு உரிமையாளர் பாக்யராஜ் என்பதன் காரணமாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைப்பு வாங்கிய உடன் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.