தாடி, மீசை எடுத்த ஆர் ஜே பாலாஜி.! புதிய லுக்கில் ரசிகர்களை மிரட்டும் புகைப்படம்.

rj-balaji-

சினிமா உலகில் நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி  கிரிக்கெட் கமென்ட்ரியாக இருந்து பின் சினிமாவில் தீயா வேலை செய்யணும் குமாரு, நானும் ரவுடிதான், கடவுள் இருக்கான் குமாரு, கவலை வேண்டாம் போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

அதைத்தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அடுத்து ஆர் ஜே பாலாஜி இயக்கிய வீட்ல விசேஷம் திரைப்படமும் காமெடி சென்டிமென்ட் போன்ற அனைத்தும் கலந்திருந்தது மற்றும் இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா போன்ற முன்னணி நடிகர் நடிகைகளும்..

கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தனர் இந்த படமும் நல்ல ஹிட் அடித்தது. இந்த நிலையில் தற்போது ஆர் ஜே பாலாஜி கையில் சிங்கப்பூர் சலூன், ரன் பேபி ரன் ஆகிய இரு படங்கள் இருக்கின்றன. இதில் முதலாவதாக சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தை இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி ஒரு முடி அலங்கார நிபுணராக நடித்துள்ளார். அந்த கேரக்டருக்காக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் பயிற்சி எடுத்துள்ளாராம். இந்த நிலையில் சிங்கப்பூர் சலூன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை எடுத்து ஆர் ஜே பாலாஜி புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் இரு விதமான கெட்டப்புகளில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

சிங்கப்பூர் சலூன் படத்திற்காக அவர் அதிக முடி மற்றும் மீசை தாடி உடன் இருந்துள்ளார். தற்போது ஷூட்டிங் முடிந்துள்ளதால் மீசை தாடி எல்லாம் எடுத்துவிட்டு ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு மாறி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றன.

rj-balaji-
rj-balaji-