விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு முடிந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற சீரியல் தான் ராஜா ராணி இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஆலியா மானசா-சஞ்சீவ் நடித்திருந்தனர்.
இவ்வாறு வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற இந்த சீரியல் நிறைவடைந்த நிலையில் சிறிது இடைவெளிக்கு பிறகு சில காலங்களுக்கு முன்பு ராஜா ராணி சீரியல் இரண்டாவது பாகம் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த சீரியலில் ஹீரோயினாக ஆலியா மானசா ஹீரோவாக சித்து நடித்து வந்தனர்.
இவர்களுடைய கெமிஸ்ட்ரியும் அருமையாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இப்படிப்பட்ட நிலையில் ஆலியா மானசாக இரண்டாவது முறையாக திடீரென கர்ப்பமானதால் குழந்தை பிறக்கும் நேரத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார். எனவே இந்த கதாபாத்திரத்திற்கு ரியா என்பவர் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரியா திடீரென ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார். ரியா சூட்டிங் நடைபெறும் நேரத்திற்கு சில காரணங்களால் அவரால் வர முடியாத காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து அவரிடம் சொல்லாமலேயே வேறு ஒரு நடிகையை கமிட் செய்து விட்டதாக கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆஷா கௌடா நடித்து வருகிறார். இவ்வாறு விஜய் டிவி சீரியலில் இருந்து துரத்தி விடப்பட்ட ரியா தற்பொழுது ஜீ தமிழில் புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க இருக்கும் நிலையில் அது குறித்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது ஜீ தமிழில் சண்டக்கோழி என்ற புதிய சீரியல் அறிமுகமாக இருக்கும் நிலையில் இந்த சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார். இவ்வாறு ராஜா ராணி சீரியலின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவான நிலையில் கண்டிப்பாக இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.