அரபி குத்துக்கு மரண குத்து குத்தும் ரித்திகா சிங்.! ஆட்டம் காணும் இணையதளம்

vijay-ritikasing
vijay-ritikasing

விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது அதுமட்டுமில்லாமல் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக்கிளப்பும் படி அமைந்துள்ளது.  படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தநிலையில் பீஸ்ட் முதல் சிங்கிள் டிராக் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டார்கள் இந்தப்பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதியிருந்தார் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

மேலும் இந்த பாடல் 170 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. அரபிக் குத்து பாடலுக்கு அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி,  ஜோனிட காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே ,நெல்சன் மகனாக, திவ்யபாரதி, சஞ்சனா ஷிவானி நாராயணன், கீர்த்தி சுரேஷ், சுனிதா, யுவன் சங்கர் ராஜா, சம்யுக்தா என பலரும் நடனமாடி சமூகவலைதளத்தில் வீடியோவை பதிவிட்டு வந்தார்கள்.

அந்த வகையில் தற்பொழுது நண்பர்களுடன் ரித்திகா சிங் நண்பர்களுடன் அரபிக் குத்துப்பாடலுக்கு ஜாலியாக நடனமாடி அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது ரித்திகா சிங் தற்போது பாக்சர், வணங்காமுடி, கொலை ,பிச்சைக்காரன் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார்.