சமீபகாலமாக இளம் நடிகைகள் பலரும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்த கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான இறுதிச்சுற்று படத்தின் கதையை சரியாக தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங்.
முதல் படமே அவருக்கு அமோக வரவேற்பை பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் ரித்திகா சிங் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய நல்ல திரைப்படங்களை கொடுத்த தன் விளைவாக தற்போது இவரது கையில் பல பட வாய்ப்புகளை தன்வசப்படுத்தி உள்ளார்.
அருண் விஜயுடன் பாக்சர் அரவிந்த்சாமி உடன் வணங்காமுடி போன்ற பல்வேறு படங்களில் கமிட் ஆகியுள்ளார். இதிகாசம் இதைத் தவிர பாலாஜி குமார் இயக்கும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக உள்ள ஒரு புதிய படத்திலும் தற்போது ரித்திகா சிங் கமிட்டாகியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு படக்குழு தற்போது கொலை என்ற தலைப்பை வைத்து உள்ளது. மேலும் அந்த போஸ்டரை கூட படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கொலை படத்தை இன்ஃபினிட்டி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிச்சர்ஸ் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவர் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இதைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. கொலை படத்தின் டைட்டில் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
![kolai](http://localhost/tamilnew/wp-content/uploads/2021/10/kolai-4443.jpg)