தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பயணித்து முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் ரஜினி-கமல். ஒரு சில நடிகர்கள் தனது இளம் வயதிலே ஹீரோவாக நடித்து இருந்தாலும் வயது ஏற ஏற குணச்சித்திர கதாபாத்திரம், அப்பா, சித்தப்பா போன்ற ரோல்களில் தான் நடித்து வருகின்றனர்.
ஆனால் அதற்கு எதிர்மாறாக ரஜினி கமல் இருவருமே தற்போது வரை ஹீரோவாகவே நடித்து வருகின்றனர் தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இவர்களது மவுஸ் இன்றும் குறையாமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம்.
மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் குறைச்சல் இல்லாமல் முதல் நாள் வசூலில் மட்டும் 24.5 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது. இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம்.
அண்ணாத்த படத்தின் சாதனையை முறியடிக்குமா என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். பான் இந்திய அளவில் உருவாக்கியுள்ள விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பத்தல பத்தல பாடல் போன்றவை வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இந்த படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ளதை அடுத்து விக்ரம் படம் முதல் நாள் வசூலில் இதுவரை தமிழில் வெளிவந்த படங்களின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன.