தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு இயக்குனர்களாக கலக்கி வருபவர்கள் பலர் உள்ளனர் அந்த வகையில் கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த ரிஷப் ஷெட்டி தற்போது இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இவருடைய படைப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.
அந்த வகையில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு உலக அளவில் வெளியான திரைப்படம் தான் காந்தாரா. இந்த திரைப்படத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றது. மேலும் வாழ்த்துக்களும் குவிந்தது இந்த படத்தில் ஹீரோவாக ரிஷப் ஷெட்டி தந்தை மகன் என இரு வேடத்தில் நடித்திருந்தார் மேலும் சப்தமி கௌடா கதாநாயகியாக நடித்திருந்தார்.
இவர்களை அடுத்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர்களை அடுத்து அச்சுத்குமார், பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் தும்மினாட், மானசி சுதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கேஜிஎஃப் படம் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பெல் பிலிம்ஸ் நிறுவனம் காந்தாரா படத்தினை தயாரித்திருந்தது. பிறகு இந்த படத்தை தமிழில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது சுமார் 16 கோடி பொருட்ச அளவில் உருவான காந்தாரா படம் பாக்ஸ் ஆபிஸில் 450 கோடி வரை வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படித்துள்ளது.
திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட நிலையில் தற்பொழுது ஓடிடியிலும் வெளியாகியிருக்கிறது இந்நிலையில் காந்தாரா படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதாவது காந்தாரா படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில் ‘வரப்போவது இரண்டாவது பாகம் அல்ல நீங்கள் பார்த்தது தான் இரண்டாவது பாகம் முதல் பாகம் தான் அடுத்து தயாராகி’ வருகிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.