நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.பேட்டிங்கை தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் படிக்கல் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.
டெல்லி கேப்பிடல் பந்துவீச்சாளர்கள் இதனால் தொடக்கத்திலேயே மளமளவென விக்கெட்டுகளை இழந்ததால் குறைந்தது அந்த அணி ட 150 ரன்களாவது எடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது ஆனால் ஏபி டிவிலியர்ஸ் – இன் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 171 ரன்களை எட்டியது.
ஏபி டிவில்லியர்ஸ் கடைசிவரைக்கும் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்திருந்தார்.கடைசி ஒரு ஓவரில் மட்டும் டிவிலியர்ஸ் 23 ரன்கள் விளாசினார் அதில் 3 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை எடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல் அணியின் வீரர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் ஒரு கட்டத்தில் ரிஷப் பன்ட் தனது அதிரடி காட்டினார் அதேபோல சிம்ரன் ஹெட்மையரும் தனது அதிரடி காட்ட தொடங்கினார் ரிஷப் 48 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்.
இன்று ஹெட்மையர் 25 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார் இருப்பினும் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல் அணி தோல்வியடைந்தது. இது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் டெல்லி கேப்பிடல் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர் அந்த வகையில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் இதுகுறித்து பேசி உள்ளார்
ஆர்சிபி அணி 171ரன்கள் எடுத்திருக்க வாய்ப்பில்லை ஆனால் அவர்கள் அந்த அளவிற்கு விட்டுவிட்டார்கள் டெல்லி கேப்பிடல் வீரர்கள் என சாடினார். ஏனென்றால் தொடக்கத்திலேயே டாப் பந்து விச்சளார்களின் ஓவர்களை எல்லாம் முடித்து விட்டார் கடைசியில் டாப் பந்துவீச்சாளர்கள் யாருமில்லாததால் ரன்கள் மலமல வேற தொடங்கியது.
இந்த போட்டியில் அமித் மிஸ்ரா 3 ஓவர்களில் வெறும் 27 ரன்களை எடுத்திருந்தார் மேலும் ஒரு விக்கெட்டையும் விடுத்திருந்தார் கடைசி ஒவரை மிஸ்ராவை யாவது போட வைத்து இருந்தால் எப்படியும் டிவிலியர்ஸ் அவுட் ஆகியிருப்பார் அதை கோட்டை விட்டார் ரிஷப் பண்ட் என வறுத்தெடுக்க தொடங்கினார்.
மேலும் ரிஷப் பண்ட் கேப்டன்சி பணி மிகவும் மோசமாக இருந்தது. அவருக்கு எப்படி பந்து விச்சளர்களை எப்படி பயன்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை அந்த அளவிற்கு பல தவறுகளை அவர் செய்துள்ளார் என சாடினார்.
சிறந்த பந்து வீச்சாளர்களை எப்பொழுதும் கடைசி நேரத்தில் பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம் அதையே அவர் கோட்டை விட்டு விட்டார் அதை விட்டுட்டு தனக்கு பிடித்த வீரர்களை கடைசியில் பந்து போட சொன்னால் இப்படித்தான் நடக்கும் எனவும் கூறினார். பண்ட் கேப்டன்ஷிப் 10/3 தான் தருவேன் எனவும் கூறினார்