தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு இருந்த வண்ணமே இருக்கிறது ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே 20 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர் அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை திரிஷா ஆரம்பத்தில் மாடல் அழகியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இவர் ஒரு கட்டத்தில் சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்தார்.
முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்த இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன குறிப்பாக அஜித் விஜய் சூர்யா விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டு அதிக ரசிகர்கள் பட்டாளத்தையும் வளைத்து போட்டார்.
திரிஷா வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் எப்படியாவது நடித்து விடுவார், அதனால் சினிமாவில் இவரது இடம் அப்படியே இருக்கிறது. மேலும் இவரை ரசிகர்கள் தொடர்ந்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கான காரணங்கள் குறித்து வெளிவந்துள்ளன
இவரது நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சினிமா ஆரம்பத்தில் எப்படி ஸ்லிம்மாக இருந்தாரோ அதேபோலவே இப்பொழுதும் ஸ்லிம்மாக இருப்பதால் அனைவருக்கும் பிடித்த நடிகையாக இருக்கிறார் இதற்கான காரணம் குறித்து அவரிடம் கேள்வி கேட்ட பொழுது..
சில பதில்களை கொடுத்து இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். இதற்கான பதில் என்னிடம் இல்லை. குடும்ப ஜீன் என்று சொல்லலாம். வேற என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எப்பொழுதுமே என்னை நான் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.