Indian Actress: இந்தியாவின் முதல் 10 பணக்கார பெண்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அப்படி ஒரு சில நடிகைகள் மட்டுமே நடிகர்களுக்கு சமமாக சம்பளம் வாங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கி பணக்கார லிஸ்டில் இணைந்திருக்கும் நடிகைகள் குறித்து பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய்: நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தியாவின் பணக்கார நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளார் இவருடைய சொத்து மதிப்பு சுமார் ₹828 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராய் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார்.
பிரியங்கா சோப்ரா: இந்தியாவின் பணக்கார நடிகைகளின் லிஸ்டில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கும் பிரியங்கா சோப்ரா ரூபாய் 580 கோடி சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு 15 முதல் 40 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.
தீபிகா படுகோன்: இந்த லிஸ்டில் 3வது இடத்தை பெற்றிருக்கும் தீபிகா படுகோன் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 500 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக 15 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
கரீனா கபூர்: 4வது இடத்தை பெற்றிருக்கும் கரீனா கபூர் சொத்து மதிப்பு சுமார் ரூபாய் 440 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 8 முதல் 18 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.
அனுஷ்கா சர்மா : ஐந்தாவது இடத்தைப் பிடித்து இருக்கு அனுஷ்கா சர்மா ரூபாய் 250 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளாராம். இவர் ஒரு படத்திற்க்கு 12 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
மாதுரி தீட்ஷீட்: ரூபாயா 250 கோடி சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரன் நடிகைகள் பட்டியலில் ஆறாவது இடத்தினை பெற்றிருக்கும் மாதுரி தீட்ஷீட் ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
கத்ரீனா கைஃப்: ஏழாவது இடத்தில் இருக்கும் கத்ரீனா கைஃப் ரூபாய் 235 கோடி சொத்து மதிப்புடன் பாலிவுட்டில் கலக்கி வரும் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக 10 முதல் 12 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.
ஆலியா பட்: ரூபாய் 229 கோடி சொத்து மதிப்புடன் எட்டாவது இடத்தில் இருக்கும் ஆலியா பட் ஒரு படத்தில் நடிப்பதற்காக 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
நயன்தாரா: இந்த பணக்கார நடிகைகளின் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா மட்டுமே இவருடைய சொத்து மதிப்பு ரூபாய் 200 கோடியாம். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 10 முதல் 11 கோடி வரை நயந்தாரா சம்பளம் வாங்கி வருகிறார்.
ஷ்ரத்தா கபூர்: இந்த பட்டியலில் 10வது இடத்தினை பிடித்திருக்கும் ஷ்ரத்தா கபூர் சொத்து மதிப்பு ரூபாய் 123 கோடியாம். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக 7 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.