ரிச்சர்ட் ரிஷியை தொடர்ந்து சிம்புவை வைத்து இயக்கயுள்ளாரா மோகன் ஜி.?

simbu-and-mohan-ji
simbu-and-mohan-ji

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் மோகன் ஜி. இவர் 2016ம் ஆண்டு வெளிவந்த பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இதுவே அவருக்கு முதல் படமாகும்.

முதல் படத்திலேயே தனது சிறந்த படைப்பை வெளிப்படுத்தினார் இதன்மூலம் ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் திரௌபதி என்னும் படத்தை ஷாலினி அவர்களின் அண்ணனான ரிச்சர்ட் ரிஷியை வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல ஊடகங்கள் இப்படத்தை விமர்சித்தனர். திரௌபதி படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த வருடம் பல படங்கள் வெளியாகி உள்ளன அதில் தர்பாருக்கு அடுத்து இந்த படம் தான் நல்ல வசூலைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இப்படத்திற்கு குறைந்த தியேட்டர் கிடைத்தது. திரௌபதி படம் குறித்து பதிலளித்த மோகன்ஜியிடம் ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார் அவர் கேட்டது நீங்கள் சிம்புவை வைத்து படம் எடுப்பீர்களா என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த மோகன்ஜி, சிம்பு அவர்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே. ஆனால் ரீச்செட் உடன் தற்போது படம் எடுக்க உள்ளேன் இதனைத்தொடர்ந்து வேண்டுமென்றால் நான் சிம்புவை அணுகுவேன் என அவர் குறிப்பிட்டிருந்தார்.