Richa Gangopadhyay : சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் பலரும் இங்கு நடக்கும் சில தவறான விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக சொல்லி வருகின்றனர் அந்த வகையில் தமிழ், தெலுங்கில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தவர நடிகை ரிச்சா கங்கோபத்யாய். இவர் முதலில் தெலுங்கு படமான “லீடர்” என்னும் படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு நாகவல்லி என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த இவர் தமிழில் தனுஷின் மயக்கம் என்ன படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஒஸ்தி இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதை தொடர்ந்து முன்னணி நடிகையாக மாறினார் இருப்பினும் 2013 ஆம் ஆண்டு இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை எனக்கூறி கிளம்பினார்.
அதன் பிறகு இவர் பற்றிய செய்திகள் வெளி வரவே இல்லை இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகை ரிச்சா கங்கோபத்யாய். ஏன் சிகரம் ஓய்வு அளித்தீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு பெரிய காரணம் ஒன்றும் இல்லை.. சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆகிவிட்டேன் தற்பொழுது சிறந்த தொழிலதிபராக ஆக வேண்டும் என ஆசை இருக்கிறது.
வாஷிங்டன் யுனிவர்சிட்டியில் எம்பிஏ படித்து முடித்து இருக்கிறேன் தொழில் சாதிக்க வேண்டும் என்ற நிறைய ஆசை எனக்கு இருக்கிறது. என்னை பொருத்தவரை சினிமாவில் நடித்த உடனேயே பணம் சம்பாதித்து விடலாம் ஆனால் எனக்கு போதுமான பணம் இருக்கிறது பணத்திற்காக சினிமாவில் ஓடுவதற்கு எனக்கு விருப்பமில்லை என்பது போல பேசி இருந்தார்.
மேலும் பட வாய்ப்புக்காக உங்களை யாரேனும் படுக்கைக்கு அழைத்தார்களா.? பல நடிகைகள் இப்படியான புகார்களை கூறுகிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதில் அளித்தார் முதலில் இந்த கேள்வியை ஒரு பெண்ணிடம் கேட்பதற்கு தனி தைரியம் வேண்டும் இப்படி நீங்கள் கேட்கிறீர்கள் ஆனால் என்னை பட வாய்ப்புக்காக படுக்கை யாவரும் அழைத்ததில்லை.
ஆனால் திரைப்படங்களில் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றார்கள் பட வாய்ப்புக்காகவும், ரசிகர்களுக்காகவும் கவர்ச்சியாக நடித்தேன். வெகு சில படங்களில் தேவையில்லாத இடங்களில் கிளாமரான உடை அணிந்து கொண்டு அந்த காட்சியின் நோக்கத்தை சிதைக்கும் விதமாக கவர்ச்சியான உடைகள் வர சொல்லி இருக்கிறார்கள்.
அப்போது இந்த காட்சிக்கு இப்படியான உடை அணிந்து வர வேண்டுமா என்று கேட்டிருக்கிறேன். அதன் பிறகு சரி வேறு உடை மாற்றிக் கொண்டு வாருங்கள் என கூறுவார்கள். இந்த மாதிரி சில சங்கடங்களை எதிர்கொண்டு இருக்கிறேன் தவிர பட வாய்ப்புக்காக படுக்கை யாரும் படுக்கைக்கு அழைத்ததில்லை.. நான் யாரிடமும் அவ்வளவு சீக்கிரமாக நெருக்கமாக பழக மாட்டேன் என கூறியுள்ளார்.