சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வரும் சன், விஜய், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த வருகிறது. மேலும் இந்த தொலைக்காட்சிகள் தொடர்ந்து தங்களுடைய சீரியல் டிஆர்பியில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து சுவாரசியமான கதை அம்சமுள்ள சீரியல்களை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் புதுமுக நடிகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த முக்கியமான சீரியல் தான் ராஜா ராணி. இந்த சீரியலின் 2வது பாகம் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த சீரியலில் ஆலியா மானசா மற்றும் திருமண புகழ் சித்து இருவரும் நடித்து வந்தனர். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆலியா இரண்டாவது கர்ப்பமானதால் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.
இதன் காரணமாக இவருக்கு பதிலாக சந்தியாக கதாபாத்திரத்தில் ரியா என்ற மாடலை அறிமுகம் செய்தார்கள் ரியா மாடலிங் துறையில் பணியாற்றி வந்த நிலையில் பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியலில் தன்னுடைய கடின உழைப்பை செலுத்தி வந்த நிலையில் சில காரணங்களினால் இந்த சீரியலில் இருந்து இவரை நீக்கி விட்டனர். எனவே தற்பொழுது ராஜா ராணி சீரியலில் ஆஷா கௌதா நடித்த வருகிறார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் ரியா இந்த சீரியலில் தொடர்ந்து நடித்ததால் என்னுடைய ஸ்கின் மிகவும் டார்க் ஆகிவிட்டதாகவும் மேலும் மற்ற நடிகர்களை விட தன்னை அதிக நேரம் வேலை வாங்குவதாகவும் திடீரென இந்த சீரியலில் இருந்து தன்னை நீக்கி விட்டதாகவும் கூறினார்.
இப்படிப்பட்ட நிலையில் இதற்கு மேல் விஜய் டிவியில் எந்த ஒரு சீரியலிலும் நடிக்க மாட்டேன் என ரியா முடிவு செய்திருக்கிறாராம். அந்த வகையில் தற்பொழுது இவர் ஜீ தமிழில் புதிதாக அறிமுகமாக இருக்கும் சண்டைக்கோழி என்ற சீரியலில் நடிக்க இருக்கிறாராம் இந்த சீரியல் இரட்டை ரோஜா சீரியலுக்கு பதிலாக ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.