திடீரென்று ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிய ரியா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

raja-rani-2
raja-rani-2

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசனையும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சீரியலில் தன்னுடைய மனைவியின் ஐபிஎஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கணவர் தன்னுடைய குடும்பத்தினர்களை எதிர்த்து போலீஸ் ஆவதற்கு துணையாக நின்றார். இறுதியில் தற்பொழுது சந்தியாவின் ஐபிஎஸ் கனவும் நிறைவேற்றி விட்டார். இதற்காக சரவணன் பல கஷ்டங்களை அனுபவித்தார்.

இவ்வாறு ஒரு கணவன் தன்னுடைய மனைவியை எப்படி எல்லாம் ஊக்கப்படுத்த வேண்டும் அவருடைய கனவை நிறைவேற்ற வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை மையமாக வைத்து ராஜா ராணி சீரியல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்பொழுது பல எதிர்ப்புகளுக்கு பிறகு சந்தியா ஐபிஎஸ் ஆகி இருக்கிறார்.

இந்நிலையில் இந்த சீரியலின் சந்தியா என்ற கேரக்டரில் ஆலியா மானசா கதாநாயகியாக நடித்து வந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார். எனவே இவரை அடுத்து சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்ற புதுமுக நடிகை அறிமுகமானார். இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் தற்போது இவரும் விலகுவதாக கூறி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் இதற்கு பிறகு ரியா என்ற நான் ராஜா ராணி சீரியலில் கிடையாது என்றும் வேறு ஒருவர் சந்தியாவாக நடித்து வருவதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு திடீரென்று ரியா விளங்கியுள்ள நிலையில் யார் இதற்கு மேல் சந்தியா கதாபாத்திரத்தில் புதிதாக நடிக்க இருக்கிறார் என்பதை இனிவரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.