தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கும் நடிகர் ரஜினியின் தோல்வி திரைப்படம் ஒன்று மறுபடியும் ரீ ரிலீஸ் ஆகிறது.
அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் மறுபடியும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கவுண்டமணி, மனிஷா கொய்ராலா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் ஆன சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இயக்கியிருந்த பாபா படத்தின் ரீ ரிலீஸ் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. பாபா திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்தப்பட்ட பாபா திரைப்படம் நடிகர் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது.
ஆனால் இந்த படம் 2002 ஆம் ஆண்டு வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறாமல் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்ய போகும் பாபா திரைப்படம் வெற்றி பெறலாம் என கூறபடுகிறது. இதனை தொடர்ந்து தற்போது பாபா படத்தின் டிரைலர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ பாபா படத்தின் டிரைலர்.