மாநகரம் முதல் லியோ வரை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திய ரெட்ரோ பாடல்கள்.! அடேங்கப்பா இத்தனை பாடல்களா

retro songs used by maanagaram, kaithi, vikram, master, leo, lokesh kanagaraj
retro songs used by maanagaram, kaithi, vikram, master, leo, lokesh kanagaraj

retro songs used by maanagaram, kaithi, vikram, master, leo, lokesh kanagaraj  : தமிழ் சினிமாவில் எத்தனையோ புதிய திரைப்படங்கள் வெளியானாலும் அந்தத் திரைப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ இல்லையோ அந்த புதிய திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் ரெட்ரோ பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் அப்படிப்பட்ட பழைய பாடல்களுக்கு ரீல் செய்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள்.

என்னதான் புதிய பாடல்கள் இருந்தாலும் பழைய பாடல்களுக்கு மவுஸ் அதிகம் என்பதை நிரூபித்து வருகிறது. பல திரைப்படங்ளில்  அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய திரைப்படத்தில் ரெட்ரோ பாடலை பயன்படுத்தி வருகிறார் மாநகரம் முதல் லியோ வரை லோகேஷ் தன்னுடைய படங்களில் பயன்படுத்தப்பட்ட ரெட்ரோ பாடல்கள் என்ன என்பதை இங்கே காணலாம்.

ஐந்து படங்களில் சுமார் 13 பாடல்களை இதுவரை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளார்.

மாநகரம்
மூன்று முகம் – தேவாமிர்தம்

ரஜினி நடிப்பில் ஜெகநாதன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் மூன்று முகம். இந்த திரைப்படம் 1982 ஆம் ஆண்டு வெளியாகியது இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தேவாமிர்தம் என்ற பாடலை சங்கர் கணேஷ் இசையில் வைரமுத்து வரிகளில் எஸ்பிபி பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் குரலில் வெளியாகி இருந்தது இந்த பாடலை மாநகரம் திரைப்படத்தில் லோகேஷ் பயன்படுத்தி இருந்தார்.

நவராத்திரி – இரவினில் ஆட்டம்

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நவராத்திரி இந்த திரைப்படம் 1964 ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இரவினில் ஆட்டம் என்ற பாடலை லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்தில் பயன்படுத்தினார். இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் வரிகளில் கேவி மகாதேவன் இசையில் டி எம் சௌந்தரராஜன் குரலில் வெளியானது.

கைதி
மீரா- புது ரோட்டுலதான்

விக்ரம் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மீரா இந்த திரைப்படத்தை ஸ்ரீராம் இயக்கியிருந்தார் 1992 ஆம் ஆண்டு வெளியானது  இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள புது ரோட்டுலதான் என்ற பாடலை கைதி  திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பயன்படுத்தினார். இந்தப் பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார் வாலி வரிகளில் பின்னணி பாடகர்களான கே ஜே ஏசுதாஸ் மற்றும் கே எஸ் சித்ரா குரலில் ஒலித்தது.

என் சுவாசக் காற்றே- ஜும்பலக்கா ஜும்பலக்கா

அரவிந்த்சாமி நடிப்பில் கே எஸ் ரவி இயக்கத்தில் வெளியான திரைப்படம் என் சுவாச காற்றே  திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜிம்பலக்கா ஜும்பலக்கா பாடலை கைதி  திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பயன்படுத்தினார்.

மறுபடியும் – ஆசை அதிகம் வச்சி

பாலு மகேந்திரா இயக்கத்தில் நிழல்கள் ரவி அரவிந்த்சாமி நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் மறுபடியும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான ஆசை அதிகம் வச்சி பாடலை கைதி திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பயன்படுத்தியிருந்தார்.

இந்து – மெட்ரோ சேனல்

நடிகர் பிரபுதேவா நடிப்பில் பவித்ரன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் இந்து இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மெட்ரோ சேனல் என்ற பாடலை லோகேஷ் கனகராஜ் அவர்கள் ரெட்ரோ பாடலாக கைதி திரைப்படத்தில் பயன்படுத்தினார்.

மாஸ்டர்
அமரன்- வெத்தல போட்ட சோக்குல

நடிகர் கார்த்தி நடிப்பில் கே ராஜேஸ்வரின் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வெத்தல போட்ட சோக்குல என்ற பாடலை மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ரெட்ரோ பாடலாக பயன்படுத்தினார்.

புது நெல்லு புது நாத்து – கருத்த மச்சான்

நெப்போலியன் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் புது நெல்லு புது நாத்து இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கருத்த மச்சான் என்ற பாடலை லோகேஷ் கனகராஜ் அவர்கள் மாஸ்டர் திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் ரெட்ரோ பாடலாக.

விக்ரம்
அசுரன்- சக்கு சக்கு வத்திக்குச்சி

அருண் பாண்டியன் நெப்போலியன் இணைந்து நடித்த திரைப்படம் தான் அசுரன் இந்த திரைப்படத்தை 1995 ஆம் ஆண்டு ஆர்கே செல்வமணி இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற பாடலை விக்ரம் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ரெட்ரோ பாடலாக பயன்படுத்தினார்.

சரஸ்வதி சபதம்- கல்வியா செல்வமா வீரமா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் ஏபி நாகராஜன் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் சரஸ்வதி சபதம் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கல்வியா செல்வமா வீரமா என்ற பாடலை விக்ரம் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பயன்படுத்தியுள்ளார்.

லியோ
ஏழையின் சிரிப்பில்- கருகரு கருப்பாயி

பிரபுதேவா நடிப்பில் கே சுபாஷ் இயக்கத்தில் 2000 ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் ஏழையின் சிரிப்பில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கருகரு கருப்பாயி பாடலை லோகேஷ் கனகராஜ் அவர்கள் லியோ திரைப்படத்தில் ரெட்ரோ பாடலாக பயன்படுத்தி உள்ளார்.

பசும்பொன்- தாமரை பூவுக்கும்

நடிகர் பிரபு நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் பசும்பொன் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தாமரை பூவுக்கும் என்ற பாடலை லியோ திரைப்படத்தில் லோகேஷ் அவர்கள் பயன்படுத்தியுள்ளார்.

பொல்லாதவன் – நான் பொல்லாதவன்

1980 ஆம் ஆண்டு சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பொல்லாதவன் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நான் பொல்லாதவன் என்ற பாடலை லியோ திரைப்படத்தில் கிளைமாக்ஸ் இல் லோகேஷ் அவர்கள் பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.