வாரிசு படத்தின் “ரிசல்ட்” வெற்றியா.? தோல்வியா.? விஜய் ரியாக்ஷன் என்ன தெரியுமா

vijay
vijay

தளபதி விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 67 வது திரைப்படமான லியோ படத்தில் நடித்து வருகிறார்.  வருகின்ற தீபாவளிக்கு லியோ ரிலீசாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இதை கருத்தில் கொண்டு படக்குழு வேகமாக வேலை பார்த்து வருகிறது.

முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் சைலண்டாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் பரபரப்பாக எடுத்து வந்த நிலையில் சமிபத்தில்  ஷூட்டிங் முடிந்து படக்குழு சென்னை திரும்பி உள்ளது. வெகு விரைவிலேயே மூன்றாவது கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது. லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லியோ திரைப்படம் முழுக்க முழுக்க பக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருவதாக லோகேஷ் அண்மையில் தெரிவித்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்யின் பழைய மற்றும் புதிய செய்திகள் வெளி வருகின்றன அதன்படி விஜயின் வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றிகண்டது இந்த நிலையில் வாரிசு படத்தின் ரீசல்ட்டை பார்த்து விஜய் என கூறினார் என்ற கேள்வி தயாரிப்பாளர் தில் ராஜு பதில்  அளித்திருக்கிறார் அதில் அவர் சொன்னது.. வாரிசு பொங்கல் வின்னர் என குறிப்பிட்டார்.. விஜய் இதனால் தான் அதிக மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார் என கூறினார். தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்ட அந்த பதிவை பார்த்த பலரும் கமாண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். மேலும் இந்த தகவல் தற்பொழுது தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.