சினிமா நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமோ அதுபோல சின்னத்திரை சீரியல் நடிகைகள் பலரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். அதில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது புது புது சீரியல்களும் புதுப்புது கதாநாயகிகளும் அறிமுகமாகி இருந்தாலும்..
இதில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியல் மக்கள் மத்தியில் நல்ல ரிச் அடைந்தது. மேலும் இதில் நடித்த நடிகர் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அப்படி பூவே பூச்சூடவா தொடரில் நடித்துவந்த ரேஷ்மா இவரது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரேஷ்மா இந்த சீரியலில் அவருடன் நடித்த வந்த மதன் இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தான் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் ஆகிய சில நாட்களிலே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் என்ற சீரியலில் இணைந்து ஹீரோ ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.
மேலும் மதன் மற்றும் ரேஷ்மா இவர்களது ஜோடிக்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளன. சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மதன் மற்றும் ரேஷ்மா அவ்வப்போது அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ரேஷ்மா குறித்து தற்போது வந்த தகவல் என்னவென்றால் அபி டைலர்..
சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வரும் ரேஷ்மா தன்னை பிரபலப்படுத்திய ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மீண்டும் வர உள்ளாராம். ரேஷ்மா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புதிய சீரியலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது எனினும் எந்த ஹீரோ, என்ன தொடர் என்ற தகவல் வெளியாகவில்லை.