உங்க புள்ளை கிட்ட காட்டுங்க என கூறிய ரசிகருக்கு!! பிக்பாஸ் நடிகையின் அதிரடி பதில்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் இத்திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அந்தவகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் என்ற காமெடி இவருக்கு பெரிய பிரபலத்தை தந்தது.

அதன் பிறகு இவருக்கு சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது வாழ்வில் நடந்த சோகக் கதைகளை கூறி தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறினார்.

இப்படிப்பட்ட நிலையில் ரேஷ்மாவுக்கு திரைப்படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் தனது முன்னழகு தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இப்புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் இவரை திட்டி வந்தார்கள் அப்படிப்பட்ட ஒருவர் தான் ரேஷ்மாவிடம் ஏன் இப்படி ஆடை அணிகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு ரேஷ்மா ரிப்ளை பண்ண வில்லை என்பதால் அந்த ரசிகர் இத மாதிரி ஆடை அணிந்து முதலில் உங்கள் குழந்தைகளிடம் காட்டுங்கள் அதன்பிறகு சோஷியல் மீடியாவில் வெளியிடுங்கள் என்று மிகவும் ஆக்ரோஷமாக கோபத்துடன் தெரிவித்திருந்தார். இவ்வாறு அட்வைஸ் செய்த அந்த ரசிகர்கருக்கு ஏன் முகம் தெரியாத கணக்கிலிருந்து கமெண்ட் போடுறீங்க என்று மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார் ரேஷ்மா.