விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இவர் ராதிகா என்ற கேரக்டரில் வில்லியாக நடித்து வரும் நிலையில் இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதற்கு இவருடைய கேரக்டரும் முக்கியமானதாக அமைந்திருக்கிறதுm
அந்த வகையில் தற்பொழுது பாக்கியா கோபி, ராதிகா இருவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் 18 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வந்தார். எனவே கோபியிடம் ஒரு மாதத்தில் 18 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு உங்களை வீட்டை விட்டு அனுப்புகிறேன் என சவால் விட்டிருந்த நிலையில் நாளை எபிசோடில் அவர்களுக்கான பணத்தை கொடுக்க இருக்கிறார்.
எனவே இதனால் அதிர்ச்சியான கோபி அது எல்லாம் முடியாது என சொல்ல ஆனால் ராதிகா இதற்கு மேல் இங்கு இருந்தால் நமக்கு மரியாதை கிடையாது என கோபியை அழைத்துக்கொண்டு வீட்டை கால செய்கின்றனர். இவ்வாறு சுவாரசியமான எபிசோடுகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகை ரேஷ்மா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரக்கூடியவர்.
அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி சமீபத்தில் பிரபலம் ஒருவருடன் பிரைடல் போட்டோஷூட் நடத்திய இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்த நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மறுமணமா என்று கமெண்ட் செய்து வந்தார்கள்.
ஆனால் இது குறித்து ரேஷ்மா நான் மூன்று விஷயங்கள் குறித்து பேசுகிறேன் Bridal Magazineக்காக நான் அந்த போட்டோ ஷூட்டை நடத்தினேன் அதுவும் ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் அந்த படத்தை வெளியிடுவது பற்றிய யோசிக்கவில்லை எனவே தற்போது தான் வெளியிட்டேன் என கூறியுள்ளார். மேலும் 3.33 படத்தை ஆஹா தமிழில் காணுங்கள் எனது அடுத்த படமான சத்திய சோதனை படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது என கூறியுள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..