குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த சிம்பு. பின் பருவ வயதை எட்டிய பின் சினிமாவுலகில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார் ஆரம்பத்தில் காதல், ஆக்ஷன் திரைப்படங்கள் இவருக்கு கை கொடுக்க ஒரு கட்டத்தில் முழுநேர ஆக்சன் ஹீரோவாக தன்னை மாற்றிக்கொண்டார்.
அதுவும் அவருக்கு நல்லதொரு வெற்றியை கொடுத்த முன்னணி நடிகராக உயர்த்தியது திடீரென என்ன நினைத்தாளோ என்னவோ சரியாக படங்களில் நடிக்கவில்லை ஷூட்டிங்கும் சரியாக போவது கிடையாது உடல் எடையை ஏற்றி ஆள் அடையாளமே தெரியாமல் மாறினார்.
இதனால் சிம்புவுக்கு கீழே இருந்தவர்கள் எல்லாம் அவரை முந்தி உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றனர். இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட சிம்பு அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து தற்போது சிறந்த இயக்குனர்கள் கதை கேட்டு அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு திரைப்படம் நல்லதொரு வெற்றியை பெற்று 100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் படைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது.
அதன் பின் நடிகர் சிம்பு பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிம்பு குறித்து நடிகை ஓவியாவிடம் கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் சொன்னது சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்கிறார் என கூறினார் மேலும் அவருக்கு நிறைய தோழிகள் இருக்கின்றனர்.
சிலருடன் பிரேக் அப் ஆகி உள்ளது என கூறினார் ஆனால் மேலும் அவருடன் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டது ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த ஓவியா நான் என்ன சிம்பு பொண்டாட்டியா என ஆங்கிலத்தில் கோபமாக சொல்லி உள்ளார். உங்களைப் போலத்தான் எனக்கும் அவரைப் பற்றி ஓரளவு தான் தெரியும் என கடைசியாக கூறி முடித்தார்.