இயக்குனர் சிறுத்தை சிவா தெலுங்கு சினிமாவில் முதலில் அடி எடுத்து வைத்திருந்தாலும் அதன்பின் தமிழ் சினிமா தான் உச்ச நட்சத்திரங்களின் படங்களை அதிகம் அள்ளி கொடுத்து அவரை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்று அழகு பார்த்தது.
சிறுத்தை சிவாவைவும் சும்மா சொல்லிவிடக் கூடாது சிறப்பான திரைப்படங்களை கொடுத்து அஜித், ரஜினி, கார்த்தி போன்ற நடிகர்களுக்கு சிறப்பான ஹிட் படங்களை கொடுத்தவர் அதிலும் குறிப்பாக அஜித்துடன் இணைந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா.
அதன்பின் அவரது மார்க்கெட்டும் உச்சத்தை எட்டியது ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கதை சொல்லி அசத்தினார். அதன்படி அண்ணாத்த படம் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படம் வெளியாகியது. படம் திரையரங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது.
சிறுத்தை சிவா ரஜினிக்கு எப்படி கிராமத்து கதையான அண்ணாத்த திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றது அதேபோல அஜித் நடித்த விசுவாசம் திரைப்படம் கிராமத்து கதையை மையமாக வைத்துதான் எடுத்திருந்தார் இந்த படமும் பிரமாண்ட வெற்றியை ருசித்தது.
இந்த இரண்டு திரைப்படங்களும் இந்த நாளில் தொலைக்காட்சியில் வெளியானது அப்போது யார் யார் படம் அதிக அளவில் பார்க்கப்பட்டது என ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது அதன்படி பார்க்கையில் அண்ணாத்த திரைப்படம் 17.69 மில்லியன் பேர் கண்டுகளித்தனர். அஜித்தின் விசுவாசம் திரைப்படம் சின்னத்திரையில் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தை டிவியில் மட்டும் சுமார் 18.13 மில்லியன் பேர் கண்டுகளித்தனர். தமிழ்சினிமாவில் இருவரும் நல்லதொரு இடத்தைப் பிடித்திருந்தாலும் இந்த விஷயத்தில் அஜித்தை முந்த முடியாமல் ரஜினி பின்தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அதிகாரபூர்வ தகவல்.