தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்களின் மனதைக் கவர்ந்து உள்ளவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். கோலமாவு கோகிலா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அதை தொடர்ந்து தற்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை எடுத்து முடித்து உள்ளார்.
அதனை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் இதனால் சினிமாவில் கவனிக்கப்பட கூடிய இயக்குனர்களில் ஒருவராக விசுவரூபம் எடுத்து உள்ளார். நெல்சன் திலீப்குமாருடன் முதல்முறையாக நினைந்து டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் செல்லம்மா பாடல் மற்றும் ட்ரைலேர் ஆகியவை வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
வெகுவிரைவிலேயே இந்த படம் வெளிவர இருக்கிறது அந்தவகையில் இந்த திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கின்றனர். அதன் பிறகு பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியிடவும் சூட்டிங்கை விறுவிறுப்பாக முடித்து அடுத்த வருடம் பொங்கலுக்கு படத்தை கொடுத்த நெல்சன் திலீப்குமார் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் டாக்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா பாடல் குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் புதிய பதிவு ஒன்று போட்டுள்ளார் அந்த இயக்குனர் வேறு யாருமல்ல சிவகார்த்திகேயனை வைத்து ஏற்கனவே ரெமோ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் மற்றும் டிரெய்லர் மிக அருமையாக இருந்தது படம் மிக சூப்பராக ஹிட்டடிக்கும் என கூறி சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசியுள்ளார் இச்செய்தி தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருவதோடு ரசிகர்கள் நீங்கள் எப்பொழுது மீண்டும் இருவரும் இணைந்து படம் எடுப்பீர்கள் என கேட்டனர்.