தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாநாடு இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் சிம்புவின் மதிப்பையும் மரியாதையையும் உயர்த்திவிட்டது.
இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் தற்போது சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்தது மட்டும் இல்லாமல் தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் நடிகர் சிம்பு வாழ்க்கையில் செய்த ஒரு மிகப்பெரிய தவறு என்னவென்றால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தில் நடித்தது தான் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள்தான் இயக்கியிருந்தார்.
இவ்வாறு பிரபலமான நமது இயக்குனரை தமிழ் ரசிகர்கள் பெரும்பாலும் பிட்டு பட இயக்குனர் என்று அழைப்பார்கள். ஏனெனில் இவர் தேர்வு செய்யும் கதை சிறப்பாக இருந்தாலும் சரி அதில் இரட்டை அர்த்தமுள்ள காட்சிகள் உருவாக்கி திரைப்படத்தை தானே வீணாக்கி கொள்வது வழக்கம் தான்.
இவ்வாறு பிரபலமான நமது இயக்குனரின் திரைப்படம் ஒன்றில் நடிகர் விஷால் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது மிகப்பெரிய பட்ஜெட்டில் வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் கைதட்டி சிரித்து கொண்டே இருக்கிறார்கள்.