தளபதியின் முதல் பட நடிகையை ஞாபகம் இருக்கிறதா..! 31 நடிகைகள் போட்டி போட்ட நிலையில் முதலிடத்தை பிடித்த நடிகையா இது..?

vijay-3

ஆரம்பத்தில் பல்வேறு சொதப்பலான திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து விட்டு தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் தளபதி விஜய். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார் இவ்வாறு இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தனா அவர்கள் நடித்திருப்பார்.

இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் தற்போது விஜய்யுடன் நடிப்பதற்கு பல்வேறு நடிகைகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அவர் ஆரம்பத்தில் நடிக்கும்போது விஜய்க்கு ஜோடியாக நடித்த ஒரு நடிகை என்றால் அது கீர்த்தனா தான்.

இதனை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் விஜயுடன் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் விஜயுடன் அதன்பிறகு எந்தவொரு திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை அதன் பிறகு அஜித்துடன் மைனர் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அந்தவகையில் தளபதி விஜய் முதல் திரைப் படத்தில் கதாநாயகி தேர்வில் முப்பத்தொரு நடிகைகள் போட்டி போட்டார்கள் அதில் கடைசியில் தேர்வானது கீர்த்தனா தான் அப்பொழுது இவரைப் பார்க்கும்போது ஷோபனா போல இருக்கிறீர்கள் என எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் கீர்த்தனாவிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது என கீர்த்தனா கூறியது மட்டுமல்லாமல் விஜய்யுடன் நான் நடித்த காட்சிகள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும் அதுமட்டுமில்லாமல் தான் நடித்த காட்சிகள் இன்றும் தனக்கு நினைவு இருப்பதாக அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

keerthana-1
keerthana-1