தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை சிம்ரன் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ரஜினி, கமல், அஜித் ,விஜய், சூர்யா என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் ஆர்வம் காட்டி வந்தது மட்டுமில்லாமல் இவர் நடிப்புக்கு மட்டும் சிறந்தவர் கிடையாது நடனத்திலும் மிக சிறந்தவர் என்பதை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் தன்னுடைய இடுப்பு நடனத்தின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த சிம்ரனுக்கு தன்னுடைய வயது ஏற ஏற பட வாய்ப்பு குறைந்த வண்ணமே இருந்தது. அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு வெகு காலமாக சினிமாவில் முகம் காட்டாமல் இருந்து வந்த நமது நடிகை குணச்சித்திர வேடத்தில் மட்டும் நடித்து வந்தார்
அந்த வகையில் சமீபத்தில் பாவ கதைகள் மற்றும் கௌதம் மேனன் இயக்கிய வான்மகள் என்ற படங்களில் நடித்திருந்தார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் அம்மாவாக சிம்ரன் நடித்த அதன் காரணமாக பேட்டி ஒன்றில் அவரிடம் விஜய்க்கு நீங்கள் அம்மாவாக நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
நான் கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் அம்மாவாக நடித்து இருந்தேன் ஆனால் எனக்கு அந்த கதை பிடித்தால் மட்டுமே அதற்கு ஓகே சொல்வேன் அதற்காக விஜய்க்கு அம்மாவாக நடிக்க சொன்னால் எப்படி அதை மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கூறி உள்ளார்.