முதலில் வருகின்ற நடிகர் நடிகைகள் பலரும் அதற்கு முன்பாக ஜெயித்துக் காட்டிய ஒருவரை ரோல் மாடலாக வைத்து தான் சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கின்றனர் அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் இன்ஸ்பிரேஷனாக கொண்டு பல பிரபலங்கள் தற்போது சினிமா உலகில் வலம் வருகின்றனர் அவர்களில் ஒருவராக தற்போது இருப்பவர்தான் கவிதா ராதேஷ்யாம்.
இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. தமிழில் 2019ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான கோமாளி என்ற திரைப்படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்து மக்கள் மன்றம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கவிதா ராதேஷ்யாம். பாலிவுட் தமிழ் சினிமாவையும் தாண்டி கன்னடம், மராத்தி, தெலுங்கு, ஆங்கில மொழி என பல்வேறு படம் மற்றும் சீரியல்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கூட பல்வேறு வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் கவிதா பாபி, பூக் என சீரிஸ்களை கைவசம் வைத்திருக்கிறார். கவிதா ராதேஷ்யாம் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியது. நான் சினிமாவில் நடிக காரணமே கமல் என்கிற ஒருவர் தான் அவர் இன்ஸ்பிரேஷனாக கொண்டுதான் நான் சினிமாவில் நடிக்கிறேன் என கூறினார்.
மேலும் தமிழில் பேச முயற்சித்து வருகிறேன் தமிழில் மொழி கற்றுக்கொள்ள ரொம்ப ஆசையாக இருக்கிறேன் எனவும் கூறினார். அதிகம் பார்ட்டிக்கு போக மாட்டேன் பிரண்ட்ஸ் கெட் டுகெதர் பிரண்ட்ஸ் பர்த்டே பார்ட்டி மட்டுமே போவேன் வெளியே எங்கேயும் போகமாட்டேன் என கூறினார் நான் அடல்ட் படங்களையும் தாண்டி கோமாளி படத்தில் நடித்ததற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது ரொம்ப சந்தோஷம் என கூறினார்.
மேலும் நான் எங்கே வெளியே சென்றாலும் மக்கள் என்னை ஈஸியாக அடையாளம் கண்டுபிடித்து வாழ்த்துக் கூறுகின்றனர் அந்த காரணத்தினாலேயே நான் வெளியே போவதை தவிர்த்து விட்டு சோசியல் மீடியாக்களில் அதிகமாக ரசிகர்கள் சந்திக்கிறேன் என்று கூறினார்.