பல இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சிசெய்து கைவிடப்பட்ட கதையை தற்போது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனது திறமையால் மிக விறுவிறுப்பாக இந்த திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம்,ஜெயம் ரவி,கார்த்தி,விக்ரம் பிரபு,த்ரிஷா,ஐஸ்வர்யா லட்சுமி என பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் இந்த திரைப்படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.
அதில் முதல் பாகத்தை தான் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை நாம் பார்த்திருக்கலாம்.
அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து வந்த நிலையில் ரசிகர்களுக்கு ஷாக் தரும் வகையில் இந்த படத்தின் டீசர் பற்றி தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதில் இந்த திரைப்படத்தின் டீசர் முதலில் வெளிவராதாம் மேக்கிங் வீடியோவை தான் படக்குழு முதலில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியானால் நன்றாக இருக்கும் என கூறி வந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி,ரகுமான் உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து தங்களது பாகத்தை ஒரு சில பிரபலங்கள் முடித்து உள்ளதாகவும் தகவல் மிக வேகமாக வைரலாகி வருகிறது.