‘றெக்க’ படத்தில் பாவாடை தாவணியில் மாலா அக்காவாக நடித்த நடிகையா இது.! புகைப்படத்தை பார்த்து அசந்து போகும் ரசிகர்கள்.

sija rose
sija rose

நடிகை சிஜா ரோஸ் தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் இவர் முதன்முதலில் கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார், 2012ம் ஆண்டு மகடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து அதே ஆண்டில் மலையாளம் திரைப்படத்திலும் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார், தமிழில் ‘கோழி கூவுது’ என்ற திரைப்படம்தான் இவருக்கு முதல் திரைப்படம் அந்த திரைப்படத்தில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் கோழி கூவுது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவிற்கு பெயரைப் பெற்றுக் கொடுக்கவில்லை, அதன் பிறகு தமிழில் ‘மாசாணி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமும் அவருக்கு பெரிதளவு பேரை பெற்றுக் கொடுக்கவில்லை அதன்பிறகு 2016ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் றெக்க திரைப்படத்தில் மாலா அக்காவாக நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்து நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது ரெக்க படத்தில் இவர் தாவணி பாவாடை அணிந்து கிராமத்து பெண் போல் நடித்திருந்தார். இந்நிலையில் இவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் றெக்க படத்தில் மாலா கதாபாத்திரத்தில் நடித்தவரா இது என ஆச்சரியம் அடைகிறார்கள்.

அந்தளவுக்கு மாடர்ன் உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

siji rose
sija rose
siji rose
sija rose
siji rose
sija rose