தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிஜா ரோஸ் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அதுமட்டுமில்லாமல் மலையாளத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பொதுவாக ஒரு சில நடிகைகள் ஒரு திரைப்படத்தில் நடித்தால் கூட ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விடுவார்கள்.
ஆனால் ஒரு சில நடிகைகள் என்னதான் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய மிகவும் கஷ்டப்படுவார்கள். அந்த வகையில் சிஜாரோஸ் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். சிஜா ரோஸ் 2018 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் முதன்முதலாக கோழிகூவுது என்ற திரைப்படத்தில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு எந்த ஒரு திரைப்படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. தமிழில் மாசாணி என்ற திரைப் படத்திலும் இவர் நடித்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.
அதன்பிறகு 2016ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய ரெக்க என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் அக்காவாக நடித்து ஒட்டுமொத்த இளசுகள் மனதிலும் இடம் பிடித்து விட்டார் ஏனென்றால் இந்த திரைப்படத்தில் மாலா டீச்சராக நடித்து இருப்பார். அதேபோல் இந்த திரைப்படத்தில் கண்ணம்மா கண்ணம்மா என்ற பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ரசிக்க வைத்தது.
ரெக்க திரைப்படத்திற்கு பிறகு இவர் பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை என்ற நிலையில் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார். அப்படி இருக்கும் வகையில் இவர் முதன்முதலாக ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் புடவை அணிந்து கொண்டு ஒய்யாரமாக நடனமாடுகிறார்.
இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் லைக் அள்ளி குவித்து வருகிறார்கள்.