என்னை பற்றி பேச உனக்கு எந்த அருகதையும் இல்லை..! ரொம்ப பேசினால் அதுதான் வரும் – பயில்வானிடம் கோபப்பட்ட ரேகா நாயர்.!

rekha nair
rekha nair

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகள் முதற்கொண்டு வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் வரை பலரையும் youtube பிரபலங்கள் சிலர் விமர்சிப்பது உண்டு. அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் பல நடிகைகள் குறித்து தரகுறைவாக பேசுவது மட்டம் தட்டுவது போன்றவற்றை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி இரவில் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் குறித்தும் சில விமர்சனங்களை கூறியுள்ளார்.

சீரியல் நடிகை ரேகா நாயர் சமீபத்தில் பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரு அரை நி**ண காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சி சர்ச்சையாகவும் அமைந்தது இது குறித்து ரேகா நாயகர் இடம் கேட்கும் பொழுது நான் கதாபாத்திரத்தை கதாபாத்திரமாக தான் பார்க்கிறேன் நீங்கள் ஏன் அதை வேறு மாதிரி பார்க்கிறீர்கள் என்பது போல் பேசியுள்ளார்.

இப்படி அவர் தரப்பு விளக்கத்தை கொடுத்த பிறகும் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் ரேகா நாயரை மிகவும் மோசமாக குறிப்பிட்டிருந்தார். அவர் கூறுவது அவர் நடிப்பில் எந்த எல்லைக்கும் செல்வார் என்றும் இயக்குனர் பார்த்திபனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்று மிகக் கீழ்தரமாக பேசியுள்ளார். இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதனை எதர்ச்சியாக ரேகா..

ரோட்டில் பார்த்த பொழுது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ரேகா என்னை பற்றி எப்படி நீங்கள் அவதூறாக பேசலாம் என ரேகா கேட்க பயில்வான் ரங்கநாதன் நீ அப்படி நடித்ததால் தான் நான் அப்படி பேசினேன் என்று கூறி பதிலுக்கு அவரும் சண்டையிட்டு உள்ளார் மேலும் ரேகா நான் என்ன உன் மனைவியா இல்லை பிள்ளையா..

என்னை பற்றி எதற்கு பேசுற இதுக்கு மேல அசிங்கமா பேசின செருப்பு பிஞ்சிடும் என மிக ஆக்ரோஷமாக ரேகா கத்தி உள்ளார். இதனால் அந்த இடமே சற்று பரபரப்பானது. அங்கு சுற்றி இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதன் மூலம் ஒரு பக்கம் பல நடிகைகளை பற்றி தரகுறைவாக பேசும் பயில்வானுக்கு ரேகா தக்க பதிலடி கொடுத்துள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.