Thalapathy 68 : தளபதி விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது, மேலும் லியோ திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக யார் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் தான் விஜய் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
ஆனால் இந்த கூட்டணி இணைகிறது என்று கூறியவுடன் சலசலப்பு ஏற்பட்டது ஏனென்றால் வெங்கட் பிரபுவுடன் விஜயாக என பலரும் ஆச்சரியப்பட்டார்கள் இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் படத்தை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இணையதளத்தில் கசிந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வகையில் படத்தின் ஹீரோயின் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் வெங்கட் பிரபு. அதாவது தளபதி 68 திரைப்படத்திற்கு சமந்தா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோர் கண்டிப்பாக ஹீரோயினாக நடிக்க மாட்டார்கள் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசியுள்ளார்.
வெங்கட் பிரபு இந்த மூன்று நடிகைகள் விஜயுடன் அடிக்கடி பல திரைப்படங்களில் நடித்துள்ளதால் இவர்கள் சரிப்பட்டு வர மாட்டார் என முடிவெடுத்துள்ளார், அதனால் விஜய்க்கு புதிய ஜோடியை தேடிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது அதேபோல் வெங்கட் பிரபு இவ்வாறு கூறியதால் தளபதி 68 திரைப்படத்தின் நாயகி யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.
கண்டிப்பாக சரியான நேரத்தில் தளபதி 68 நாயகி குறித்து அப்டேட்டை வெங்கட் பிரபு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது தளபதி 68 திரைப்படத்தின் இயக்கம் பணிகளை வெங்கட் பிரபு இன்னும் தொடங்கவில்லை மேலும் படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது விஜய் வெங்கட் பிரபு இந்த திரைப்படத்தில் மிகவும் ஸ்டைலிஷ் ஆக காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க இருக்கிறார் அதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் வெளியானது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் லோகேஷ் இயக்கியுள்ள லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது ஏனென்றால் இது கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி திரையரங்கிற்கு வரும் என ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.