புதிய கதாபாத்திரத்திற்காக ரெஜினாவின் விடாமுயற்சி.! காரணம் என்ன தெரியுமா.?

regina1
regina1

ஒரு சில நடிகைகள் தமிழ் திரைப்படங்களின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு சினிமாவில் பிரபலம் அடைய முடியாத காரணத்தினால் மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து அந்த மொழி திரைப்படங்களில் வெற்றி பெற்ற பல நடிகைகள் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர்தான் நடிகை ரெஜினா.

இவர் 2006 ஆம் ஆண்டு அழகிய அசுரா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இன்னும் பல படங்களில் நடித்து இருந்தார் ஆனால் எந்த படமும் சொல்லுமளவிற்கு இவருக்கு திரை உலகில் பிரபலத்தை தரவில்லை.

அதன் பிறகு தெலுங்கில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் தெலுங்கு சினிமா அவரது வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பல வெற்றிப் படங்களைத் தந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவர் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வந்ததால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த மாநாடு உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் ரஜினி தற்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். அத்திரைப்படத்தில் இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் எனவே கும்பூ, கராத்தே உள்ளிட்ட சண்டை காட்சிகளுக்காக பயிற்சி எடுத்து வருகிறாராம்.