தொடர்ந்து சர்ச்சையான விளம்பர படங்களில் நடிக்கும் ரெஜினா கசாண்ட்ரா.? இப்ப எந்த மாதிரி விளம்பர படத்தில் நடித்துள்ளார் தெரியுமா.? அவரே வெளியிட்ட புகைப்படம்.

regina

இளம் வயதிலேயே சினிமா உலகில் நடிக்க வந்தவர் ரெஜினா கசாண்ட்ரா.  அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2005ஆம் ஆண்டு வெளியான கண்ட நால் முதல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் அதன் பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்தார் ஒரு கட்டத்தில் இவருக்கு தெலுங்கு சினிமா பக்கத்திலும் வாய்ப்புகள் குவிந்தன.

தெலுங்கு சினிமாவில் என்னதான் திறமையாக நடித்தாலும் சற்று கவர்ச்சி இருந்தால்தான் நின்று தூரம் பயணிக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல தெலுங்கு சினிமாவில் குட்டையான ஆடைகளை அணிந்து தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கி கொண்டதோடு மட்டுமல்லாமல் தற்போது முன்னணி நடிகையாகவும் அங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளார் ரெஜினா கஸன்ட்ரா.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஓடிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெஜினா கசாண்ட்ராவுக்கு 2021 – 2022 நல்ல ஆண்டாகவே இருக்கின்றன அதிலும் 2022 இரண்டில் இவர் ஆச்சாரியா,  கள்ளபார்ட் ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன.

மேலும் இவரது நடிப்பில் வெகுவிரைவிலேயே பார்டர் திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவையும் தாண்டி ரெஜினா கஸன்ட்ரா அப்பொழுது விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் சீட்டு கட்டு மையமாக வைத்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்திருந்தார் அதைத் தொடர்ந்து தற்போது விஸ்கி ஒன்றுக்கான விளம்பரத்திலும் தற்போது இவர் நடித்து உள்ளார்.

இது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது, அதை கண்டு ஒரு சிலர் விமர்சித்தும் வருகின்றனர் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரெஜினா கஸன்ட்ரா. மேலும்  பதிவையும் அவர் குறிப்பிட்டுள்ளார் அதில் அவர் கூறியது : 9 வயதில் தொகுப்பாளராக வந்து பின் விளம்பரப் படங்களில் நடித்து சினிமாவுக்குள் வந்து உள்ளேன் எனது வாழ்க்கையில் எனது இந்த பயணம் ஒரு பொக்கிஷம் என குறிப்பிட்டார். மேலும் விஸ்கியை பற்றி பதிவிட்டுள்ளார்.  அவர் விஸ்கியுடன் இருக்கும் கியூட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

regina
regina