blue sattai maran leo movie review : விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப் போட்டு வருகிறது. 300 கோடி பட்ஜெட்டில் உருவான லியோ ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிசினஸில் பல கோடி லாபம் பார்த்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
தரமான படங்களை தந்து வரும் லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக விஜய்யை வைத்து சூப்பர் ஹிட் மாஸான படத்தினை தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் இவர்களுடைய கூட்டணி இல்லை என விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது விஜய்யின் லியோ திரைப்படம் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதை என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழால் முதன்முறையாக கண்கலங்கிய அர்ஜுன்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.
மாஸ்டர் படத்தின் வெற்றினைத் தொடர்ந்து லியோ படத்தில் விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்தது இந்த படத்தினை லலித் குமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவானது இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது ப்ளூ சட்டை மாறனும் லியோ படம் குறித்து தனது விமர்சனத்தை பதிவிட சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. அதாவது, விஜய்யின் லியோ A History of Violence படத்தோட அபிஷியல் ரீமேக் என டைட்டிலிலேயே லோகேஷ் கூறிவிட்டார். ஹீரோ பார்த்திபன் காஷ்மீரில் ஒரு காபி ஷாப் வைத்து தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருவார் அங்கு ஒரு ரவுடி கும்பல் பிரச்சனை பண்ண ஹீரோ விஜய் தற்காப்புக்காக அவங்கள சுட்டு தள்ளிடுவார்.
இந்த சம்பவம் நீதிமன்றம் வரை போக தற்காப்புக்காக தான் ஹீரோ ரவுடிகளை கொலை பன்னிருக்காருனு கோர்ட் பாராட்டிய விடுதலை செஞ்சிடுது. இந்த செய்தி பத்திரிக்கைளில் வரத இதனை பார்த்துட்டு தெலுங்கானாவில் இருக்கிற ஒரு கோஷ்டிக்கு அதிர்ச்சியா இருக்குது. இந்த பார்த்திபன் நம்ம இறந்துபோனால் லியோ மாதிரி இருக்கானே இவன் தான் அந்த லியோவானு சந்தேகப்பட்டு இதை தெரிஞ்சுக்குறதுக்காக அந்த கோஷ்டி பெரும் படையோடு கிளம்பி காஷ்மீர் வராங்க.
அந்த கோஷ்டி ஹீரோவோட டீ ஷாப்புக்கு போயி நீ லியோ தானே கேக்குறாங்க அதுக்கு ஹீரோ விஜய் நான் லியோ இல்ல பார்த்திபன் தான் என அவங்க கிட்ட சொன்னாலும் அந்த கோஷ்டி அத நம்புறதா இல்ல இந்த பிரஷர் அதிகமாக ஹீரோவோட குடும்பத்துக்கு பிரச்சனைகளும் வரும்போது விஜய் ஒரு முடிவு எடுக்கிறார். அதுக்கு அப்புறம் லியோ யாரு பார்த்திபன் யாரு ஏன் இந்த ஆள் மாறாட்டம் என்பதுதான் கதை என ப்ளூ சட்டை மாறன் எனக்கூறி உள்ளார்.
மேலும் படத்தோட ஃபர்ஸ்ட் ஓரளவுக்கு ஓகே ரகமா தான் இருந்தது இங்கேயே A History of Violence படத்தோட கதை மொத்தமா முடிஞ்சு போச்சுன்னு சொல்லலாம். A History of Violence மூவில ஹீரோவுக்கு பெருசா பிளாஷ்பேக் ஸ்டோரி இருக்காது ஆனால் லியோ ஹீரோவுக்கு ஒரு ஹிஸ்டரி சொல்றேன்னு சொந்த சரக்கை இறக்கி விட்டுறுக்கானுங்க. A History of Violence-ல இருக்குற Violence மொத்தத்தையும் ரசிகர்கள் பக்கம் திருப்பிட்டானுங்க.
A History of Violence மூவில ஹீரோ ஒரு அப்பாவியா காட்டுவாங்க அதனால அவர் வில்லன்களோட மோதும் போது அத பாக்குறதுல ஒரு வைப் இருக்கும் ஆனால் லியோ படத்துல ஹீரோ என்ட்ரி ஆகும்போது யாருலாம் கட்டுப்படுத்த முடியாது என ஓவர் பில்டப் கொடுத்திருக்காங்க. எங்க பிரச்சனைனாலும் உள்ள புகுந்து எத்தனை பேரை நாளும் அடிக்கிறார் ஹீரோ யாரை அடிச்சாலும் அவர் உடம்புல காயமே படாது அதனால ரசிகர்களுக்கும் பிரமிப்பா எதும் இல்ல.
முக்கியமா லியோ செகண்ட் ஹால்ஃப் உள்ள எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் தூக்கிப்போட்டு மிதிக்கிறார். வீடியோ கேமுல அடிக்கிற மாதிரி அடிச்சு போட்டுட்டு யார் கூட டயலாக் பேசணுமோ அவங்கள மட்டும் உயிரோட வச்சிருக்கார். அந்த ஒருத்தன் கிட்டயும் பேசி முடிச்சுட்டு போட்டு தள்ளிடுறாரு. ஹீரோ கிட்ட அடி வாங்குற வில்லன்கள் எல்லாரும் கும்பல் கும்பலா படுத்து கிடக்குறாங்க அது போல் எந்த படமா இருந்தாலும் வில்லன் கேரக்டர் ஸ்ட்ராங்கா இருக்க வேண்டும் ஆனால் லியோவில் வில்லன்கள் யாரும் செட் ஆகவே இல்லை.
புத்திசாலியா இல்லைனாலும் பரவாயில்லை எல்லா வில்லன்களும் முட்டாளாக இருக்கானுங்க நரபலி குடுத்துட்டு வில்லனு சொல்றதெல்லாம் சுத்தமா ஒர்க் அவுட் ஆகல. இந்த படத்த LCU ஃபேன்ஸ்னு சொல்ற முட்டு பாய்ஸ் என்னலாம் பாடுபடுத்த போறாங்களோ டீ கோடிங் பண்றேன்னு சார்ஜ் கேரக்டர் ரோலக்ஸ் வெப்பன்ஸ்னு சொல்லி என்னலாம் பண்ண போறாங்களோ என கலாய்த்துள்ளர்.
இதனை அடுத்து லியோவில் விக்ரம் படத்திலிருந்து கமல் கேரக்டர் கெஸ்ட் அப்பீரியன்ஸ் கொடுக்க வச்சிருக்காங்க இந்த மாதிரியான கேரக்டர் எல்லாம் படத்தையே புரட்டி போட்டு இருக்க வேண்டும் ஆனால் அந்த கேரக்டர் திரும்பி உட்கார்ந்து டப்பிங் மட்டும் கொடுத்து இருக்கு போதையை ஒழிக்க ஒரு ஃபேட்டரியை மட்டும் கொளுத்துனா போதாது மொத்த ஃபேட்டரியையும் கொளுத்தணும்னு வசனம் மட்டும் பேசுது. ஹீரோ காபி ஷாப் நஷ்டத்துல போகுதே என்று டென்ஷன்ல இருக்கார் அவர் கிட்ட போதையை ஒழிக்க போகலாம்னு கமல் பேசுறதெல்லாம் காமெடியா இருக்கு என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.
இறுதியில் லோகேஷ் கனகராஜ் 10 படங்களுக்கு மேல் இயக்க மாட்டேன் கூறியிருந்தார். அதை குறிப்பிட்டுள்ள இவர் லியோ லோகேஷின் 5வது படம் இதுவே கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா தான் இருக்கு அதுக்கு குறியீடா படத்திலேயே கழுதைப்புலி கூட இருக்கு லியோவை பார்க்கும் பொழுதே தெரியுது இனிமே லோகேஷ் கைதி மாதிரி ஒரு படத்தை எடுக்கவே மாட்டார் என்று என ஏராளமான தகவல்களை பகிர்ந்து கலாய்த்துளர்.