நடிகை ரீமாசன் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். 2000 ஆண்டு தெலுங்கு சினிமா மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் தான் ரீமா சென் அதனை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகிய மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரீமாசென் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தார். இவர் தமிழ் தெலுங்கு திரைப்படத்தை தாண்டி ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் மேலும் தமிழில் இவர் பகவதி, தூள், செல்லமே, கிரி, திமிரு, வல்லவன், இரண்டு, ஆயிரத்தில் ஒருவன், சட்டம் ஒரு இருட்டறை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பின்பு 2012 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான ஷில் கரன்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது இந்த நிலையில் அந்த ஆண் குழந்தைக்கு தற்பொழுது 10 வயது ஆகிறது எனவே பத்தாவது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்கள் அதன் சில புகைப்படங்களை சமூக வலைதளத்தை ரீமாசென் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில் இருக்கும் ரீமாசென் அவர்களை பார்த்து என்னை இப்படி ஆகி விட்டீர்கள் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்கள் மின்னலே திரைப்படத்தில் எப்படி இருந்தீர்கள் ஆனால் தற்பொழுது இப்படி மாறி விட்டீர்களே என வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.