இரவு பார்ட்டியில் கையில் கிளாஸுடன் ரீமா சென்.! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

reema-sen
reema-sen

தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ரீமாசென் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து இருந்தார் தமிழில் முதன்முதலாக மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மின்னலே திரைப்படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அவருக்கு ஜோடியாக ரீமா சென் நடித்திருந்தார் இருவரும் இணைந்து நடித்து வந்த இந்த திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது அதனால் ரீமா சென் அவர்களுக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பகவதி, தூள், எனக்கு 20 உனக்கு 18 செல்லமே ,வல்லவன், இரண்டு, ராஜபட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். வல்லவன் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார் பள்ளியில் திமிர் பிடித்த பெண்ணை போல்தான் நடித்திருந்தார் வல்லவன் திரைப்படத்தில்.

மேலும் ரீமாசென் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார் ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டார். பட வாய்ப்பு குறைந்ததால் திருமணம் செய்து கொண்டதாக பலரும் கருத்து தெரிவித்தார்கள்.  திருமணத்திற்கு பிறகு ரீமாசென் நடித்த முதல் திரைப்படமான கேங்ஸ் ஆப் வாசிப்பூர் திரைப் படத்தில் படுக்கை அறை காட்சியில் பின்னி பெடல் எடுத்தார்.

இதுபோல் காட்சியில் நடித்ததால் இவருக்கும் இவரது கணவருக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவலும் வெளியானது இந்நிலையில் சமீபகாலமாக ரீமாசென் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். இந்த நிலையில் ரீமா சென் அவருடைய கணவருடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

reema-sen
reema-sen