பாக்கத்தான் காமெடி பீஸ்.. நிஜத்தில் மிகப்பெரிய ஒரு தொழிலதிபராக வலம் வரும் “ரெடின் கிங்ஸ்லி” அவருடைய மறுபக்கம் இதோ.

Redin kingsley
Redin kingsley

Redin kingsley : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் இயக்குனர் நெல்சன் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில்  நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜயின் பீஸ்ட், ரஜினியின் ஜெயிலர், சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் என பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.  தற்பொழுதும் இவர் பல டாப் ஹீரோ படங்களில் சைன் பண்ணி உள்ளார் இப்படி வெற்றி நடிகராக ஓடிக் கொண்டிருக்கும்..

காமெடி நடிகர்  ரெடின் கிங்ஸ்லி ஒரு காமெடி நடிகர் மட்டும் கிடையாது பல தொழில்களையும் பார்த்து வருகிறாராம். இது குறித்து பயில்வான் ரங்கநாதன் விலாவாரியாக கூறியுள்ளார்.   அனைவரும் ரெடின் கிங்ஸ்லியை நகைச்சுவையான நடிகராக நினைக்கிறார்கள் உண்மையில் அவர் ஒரு பெரிய புத்திசாலி ரெடின் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கண்காட்சிகளின் குத்தகைதாரர்.

ரெடின் கண்காட்சிகளில் அரசு கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக சம்பாதித்து வருகிறது. சென்னை தாம்பரத்தில் பிரம்மாண்ட கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. ரெடின் தான் அதை நடத்தினார் கண்காட்சி ஒப்பந்தம் மூலம் நன்றாக சம்பாதிக்கும் ரெடின் கிங்ஸ்லியிடம்  300 பேர் வேலை செய்கிறார்கள்.

கலாநிதி போன்று பல தொழிலதிபர்களிடம் இல்லாத சொகுசுகார் ரெடின்னிடம் உள்ளது படப்பிடிப்பிலிருந்து ஓய்வு கிடைக்கும் பொழுது கூட ரெடின் வணிகத்தை பற்றி பேசுவார் இவ்வாறு மட்டுமின்றி 30 ஆண்டுகளும் மேலாக காமெடி ரெடின் கிங்ஸ்லி இந்த தொழிலை செய்து வருகிறார்.